பலதும் பத்தும்

நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய போர்க்கப்பலின் சிதைவுகள்!

கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

1908-ஆம் ஆண்டு கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது தற்செயலாக மோதியதில் ‘ஹெச்.எம்.எஸ் டைகர்’ இரண்டாகப் பிளந்து கடலில் மூழ்கியது. இதில் 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சிதைவுகள் 

‘புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்’ என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங் மற்றும் டான் மெக்முலன் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து, வைட் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் இந்த போர்க்கப்பலின் எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள ‘ஆயுதப் படைகள் சட்டத்தின்’ கீழ், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போர்க்கப்பல் சிதைவுகள் சேதப்படுத்தப்படாமல் ‘பாதுகாக்கப்பட்ட பகுதியாக’ அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button