இலங்கை

இலஞ்ச – ஊழல் விசாரணைக் குழுவால் பலரை மடக்க புதிய அதிகாரம்

இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

இந்த திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச்சட்டத்தை திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும்.

அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button