பலதும் பத்தும்

சீனாவில் AI தொழில்நுட்பத்தை நம்பிய விவசாயி – ஒரேநாளில் அனைத்தையும் இழந்த பரிதாபம்

சீனாவில் ஏஐ தொழில்நுட்பத்தை நம்பிய சீன விவசாயி ஒருவர் ஒரே நாளில் தனது மொத்த உழைப்பையும் இழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சீனாவின் சூசோவில் உள்ள 67 வயதான விவசாயி ஒருவர், செயற்கை நுண்ணறிவு உதவியாளர் வழங்கிய பூச்சிக்கொல்லி ஆலோசனையைப் பின்பற்றியதால், ஒரே இரவில் தனது 25 ஏக்கர் எள் பயிரை இழந்துள்ளார்.

அந்தச் செயற்கை நுண்ணறிவு, ஃப்ளூஃபெனாசெட் (flufenacet) என்ற களைக்கொல்லியைப் பயன்படுத்தப் பரிந்துரைத்ததாகவும், அது களைகளையும் எள் நாற்றுகளையும் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணலையின் வெளியீடுகள் தவறாக இருக்கலாம் என்ற மறுப்பு எச்சரிக்கை இருந்தபோதிலும், தகவலைச் சரிபார்க்காமல் அந்த உரையாடல் மென்பொருளின் அறிவுறுத்தல்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றியதாக குறித்த விவசாயி பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சமையல் உப்புக்குப் பதிலாக சோடியம் புரோமைடைப் பயன்படுத்துமாறு சாட்ஜிபிடி (ChatGPT) பரிந்துரைத்ததால் ஒருவருக்கு புரோமைடு நச்சுத்தன்மை ஏற்பட்ட முந்தைய சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு கருவிகள் தவறான தகவல்களை உருவாக்கக்கூடும் என்றும், அவை தொழில்முறை ஆலோசனைகளுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்றும் வல்லுநர்களும் செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்களும் பயனர்களைத் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button