தையிட்டி திஸ்ஸ விகாரை பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவரான கலகம குசலதம்ம தேரர் திரிபுபடுத்தப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பவானி வீதி விடுவிப்பு
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.
குறித்த ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்த கருத்து திஸ்ஸ விகாரையின் நடுவே வீதியொன்றை அமைக்க வேண்டும் என ஒருவித அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
பலாலி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முற்றாக இரத்து செய்துள்ளது. இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வீதி அமைக்கும் பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் ‘இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வீதி அமைக்கப்பட மாட்டாது, யாரும் பதற்றமடைய வேண்டாம்’ என அறிக்கை விட்டிருந்தார்.
இருப்பினும், விகாராதிபதி தேரரின் அறிக்கையை விட வலிவடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே பலமானதாக மாறியுள்ளது. அரசாங்கம் இதுவரை செய்த விடயங்கள்,
கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும்போது, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகமும் பயமும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
![]()