முச்சந்தி

தோண்டத் தோண்ட வந்து குவியும் எலும்புக் கூடுகள்; சனிக்கிழமை அரை நாளில் 8 அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக எட்டு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஐந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 47ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றபோதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.

இதுவரை மொத்தமாக 515 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 506 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .

இதன்போது கைகள் காட்டியவாறு மனித என்பு கூட்டு தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button