இலங்கை

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை உடன் கைவிடுமாறு மனோ வலியுறுத்து

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

“தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்காக நாம் ஒன்றிணைந்து போராடினோம். ஆனால், அந்த பழைய தோழரை இன்று காண முடியவில்லை.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குச் சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசாங்கம் இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.”– என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button