முச்சந்தி
செம்மணிப் போராட்டத்திற்கு ஆதரவு கோரி கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரம்

செம்மணியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ள நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தில் தாயகச் செயலணி செயற்பாட்டுக் குழுவினரால் துண்டுப்பிரசுரங்கள் வழங் கப்பட்டுள்ளன.
இதன்போது கிளிநொச்சி நகரம்,கனகபுரம், வட்டக்கச்சி, விசுவமடு,பூநகரி மற்றும் பரந்தன் ஆகிய இடங்களில் பொதுமக்கள்,வர்த்தகர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு தாயகச் செயலணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
![]()