உலகம்

ஈரானில் இறுக்கமடையும் பாதுகாப்புக் கட்டுப்பாடு: 56 பேருக்கு மரண தண்டனை

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.

இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும் மதப் பொலிஸாரும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கட்டாய ஹிஜாப் ஆடைக்கட்டுப்பாடு, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடைகள் மற்றும் அரசுக்கு எதிர்ப்பாகக் கருதப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக “உள்நாட்டு ஒற்றுமையை” பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஈரான் அதிகாரிகள் வலியுறுத்துவதுடன், அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிரான கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்ளும் நிலை வெகுவாகக் குறைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தரவுகளின்படி, மார்ச் மாதம் முதல் இதுவரை தேசிய பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளில் குறைந்தது 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள் மூடப்பு

இஸ்லாமிய விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி உணவகங்கள், புத்தகக் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட பல தனியார் வணிக நிறுவனங்களை அதிகாரிகள் பூட்டி முத்திரையிட்டுள்ளனர்.

நாட்டில் இணைய சேவைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், உலகளாவிய சமூக வலைத்தளங்களுக்குத் தடைகளும் தொடர்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button