இந்தியா

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை

சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி உறுப்பினர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த புகார் மனு, எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு நிலுவையில் உள்ளது.

தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணை மற்றும் வழக்கை இரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. அப்போது மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உணர் நீதிமன்றம் நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் நீதிபதி வழக்கில் இன்று ஆஜராதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி, சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்படுகிறது.

பொன்முடியை செப்டம்பர் 2ஆம் திகதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த பொலிஸாருக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணை செப்டம்பர் 2 திகதிக்கு தள்ளிவைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button