காற்று மாசுப்பாட்டால் ஆண்டுதோறும் 7000 அகால மரணங்கள் பதிவு

காற்று மாசுப்பாட்டின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 7000 அகால மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவு இயக்குநர் டாக்டர் சந்தனி விதானா நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.
உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 07 தொடக்கம் 08 மில்லியன் மக்கள் காற்று மாசுப்பாட்டின் காரணமாக உயிரிழப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள் சுவாசப் பாதை வழியாக நேரடியாக நுரையீரலுக்குள் உள்ளிழுக்கப்படுகின்றன. அவை இரத்த ஓட்டத்திலும் நுழையக்கூடும். இது பல்வேறு சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது.
முக்கியமாக ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, அத்துடன் நாள்பட்ட நுரையீரல் நோய்களும் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களும் காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
![]()