பலதும் பத்தும்

இலங்கையின் மிகப்பெரிய இயேசுவின் திருஉருவச் சிலை திறந்து வைப்பு

சீதுவை பகுதியில் அமைந்துள்ள சுபுவன் அரண வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 60 அடி உயரமுடைய பிரம்மாண்ட இயேசுநாதரின் திருஉருவச் சிலை ஆசீர்வதிக்கப்பட்டு, பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பெரிய இயேசுநாதர் திருஉருவச் சிலையாகக் கருதப்படும் இந்தச் சிலையின் திறப்பு விழாவில், மதகுருமார்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சீதுவை சுபுவன் அரண வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த 60 அடி உயரச் சிலை, கிறிஸ்தவ மக்களின் ஆன்மீக வழிபாட்டிற்கான புதிய அடையாளமாக அமைந்துள்ளதுடன், இனி பக்தர்கள் தரிசிக்கக்கூடிய முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button