பலதும் பத்தும்

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு; மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்

டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட மூன்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 3,300 ஒத்த வழக்குகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனை வழக்குகளாக இந்த மூன்று வழக்குகளும் கருதப்படுகின்றன.

இருப்பினும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், கூகுளுக்கு சொந்தமான யூடியூப் மற்றும் ஸ்னாப் இன்க். ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன,

மேலும் அவை ஒக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

சமூக ஊடகத் தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் பதட்டம், மனச்சோர்வு, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் உண்ணுதல் கோளாறுகள் போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன, மேலும் இளம் பயனர்களைப் பாதுகாக்க விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button