உலகம்

ஈரானுக்கு கடைசி வாய்ப்பு; ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

ஈரானுக்கு கடைசி வாய்ப்பு; ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இந்த பேச்சுவார்த்தை போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் சர்வ நாசத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தேன் என்றார்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற கப்பல் போக்குவரத்து, ஈரானின் வசம் உள்ள அணுசக்தி விவகாரம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும். பேச்சுவார்த்தையின் நிலை குறித்த விவரம் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்று ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமெரிக்காவுடன் தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

ஈரான் அதன் எல்லையை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்துகிறது. எங்களுக்கு போரை விரிவுபடுத்த விரும்பவில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button