சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஒரு விதை போதும்

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல், எடை குறைப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும்.
இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது.
உணவு கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அந்தவகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

வெந்தயம்
அதன்படி, ஒரு கைப்பிடி வெந்தயத்தை பொடியாக அரைத்து, தினமும் அரை டீஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இதை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம்.
வெந்தயத்தில் உள்ள கரையும் நார்ச்சத்து இதய நலனுக்கு உதவுகிறது. கரையாத நார்ச்சத்து மலச்சிக்கலை குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
தினமும் சுமார் 10 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்வதால் நார்ச்சத்து கிடைத்து, மலச்சிக்கல் குறைய உதவும் என்று மருத்துவர் கூறுகிறார்.

நீண்ட காலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், செரிமானத்தை கட்டுப்படுத்தும் நரம்புகள் பாதிக்கும். இதனால் குடல் இயக்கம் மெதுவாகி, மலம் கடினமாகி மலச்சிக்கல் ஏற்படுகிறது.
வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து, உணவு செரிமான வேகத்தை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது.
வெந்தயத்தில் உள்ள சில அமினோ அமிலங்கள், இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
மேலும், இது கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.
ஏற்கனவே நீரிழிவு மருந்துகள் அல்லது இன்சுலின் பயன்படுத்துபவர்கள், வெந்தயத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
![]()