பலதும் பத்தும்

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் தேன்கூடு போன்ற வடிவம் – உயிரினங்கள் தோன்றுவதற்கான சான்றா?

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், குறிப்பாக ‘வாலே கிராண்டே’ (‘Valle Grande’.) எனப்படும் பள்ளத்தாக்கில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான தேன்கூடு போன்ற வடிவங்களை கண்டுப்பிடித்துள்ளது.

இதேபோன்ற பலகோண வடிவங்கள் இதற்கு முன்பும் இனங் காணப்பட்டிருந்தாலும், ஒரே இடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இவை காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது, அவற்றின் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகளைத் தூண்டியுள்ளது.

1.3 முதல் 3 அங்குல விட்டம் கொண்ட இந்தப் பலகோணங்களுக்கு மிராஃப்ளோரஸ் (Miraflores) என செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதேபோன்ற அம்சங்கள் உயிரின் மூலக்கூறு பரிணாம வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்திருக்கலாம் என கருதுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அம்சங்கள் எவ்வாறு உருவானது என்பதைத் தீர்மானிக்க விஞ்ஞானிகள் தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button