பலதும் பத்தும்

ஆப்பிள் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் 2027ஆம் ஆண்டில் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடியை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தற்போது சந்தையில் உள்ள இதுபோன்ற சாதனங்களால் பயனர்களின் தனியுரிமைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச முன்னுரிமையளிக்க முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் திறன், சமூகத்தில் பெரும் அச்சத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சிலர் இவற்றை மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சாதனங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

புதிய அம்சம் அறிமுகம்

ப்ளூம்பெர்க் அறிக்கைகளின்படி, இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ஆப்பிள் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, உங்கள் தரவு கண்ணாடியை விட்டு வெளியேறாது, எனவே அவை 100% பாதுகாப்பானவை. மேலும், கண்ணாடியால் பெறப்பட்ட தரவு எந்தவொரு சேவையகத்திற்கும் அனுப்பப்படாமல், அந்தச் சாதனத்திலேயே செயலாக்கப்படும்.

ஆப்பிள் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Apple S New Smart Glasses

பயனர்களின் தனிப்பட்ட பதிவுகள், ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை.

அதில், புகைப்படங்களையோ வீடியோக்களையோ எடுக்க முடியாது, ஆனால் தங்களைச் சுற்றியுள்ள பொருட்களை அடையாளம் காண மட்டுமே உதவும் சிறப்பு சென்சார்கள் கொண்ட கேமரா அமைப்பு பொறுத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், இந்த புதிய சாதனம் 2027 ஜூன் மாதம் நடைபெறும் WWDC மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, ஆண்டின் பிற்பகுதியில் சந்தையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button