பலதும் பத்தும்

நியூயார்க்கில் ரோபோவை ஆசிரியராக அறிமுகப்படுத்தும் திட்டம் இடைநிறுத்தம்

நியூயார்க்கின் கிராமப்புற பகுதிகளில் , சாலி என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மனித உருவ ரோபோவை ஆசிரியராக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சலமன்கா நகர பாடசாலை நிர்வாகம் 60,000 டொலர் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது.

தரவு தனியுரிமை, ரோபோவின் கற்பித்தல் பங்கு, மற்றும் பாலியல் பொம்மைகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்துடன் உற்பத்தியாளரான ரியல்போட்டிக்ஸ் தொடர்புக்கொண்டுள்ளதன் காரணமாக இந்த திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நியூயார்க் மாநில ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மெலிண்டா பெர்சன் (Melinda Person), செயற்கை நுண்ணறிவை விட மனிதர்களுடனான தொடர்பே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button