பலதும் பத்தும்

இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்!

பொதுவாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா என்பது அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடு.

இங்கு இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான கோவில்கள் தங்களின் கட்டிடக்கலை, வரலாறு, மர்மங்கள் மற்றும் நம்ப முடியாத சிறப்புகளுக்கு பெயர்பெற்றவை என்றால் மிகையாகாது.

இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா? | Whtch Indian Temple Built With 40 000 Kg Of Ghee

அவற்றில் சில கோவில்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற கதைகளையும் அதிசயங்களையும் தன்னுள் சுமந்தபடி கம்பீரமாக நிற்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கோவில் ராஜஸ்தானின் பாலைவன நகரமான பிகானேரில் அமைந்துள்ளது.

நெய்யால்  கட்டப்பட்டதா?

தண்ணீர் பற்றாக்குறை நிலவிய காலத்தில், ஒரு துளி தண்ணீர்கூட பயன்படுத்தாமல், சுமார் 40,000 கிலோ தூய நெய்யைக் கொண்டு கட்டப்பட்ட 550 ஆண்டுகள் பழமையான கோவில் என்று சொன்னால் நம்புவீர்களா?

அதுவே 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பண்டசார் சமணக் கோவில். இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்தக் கோவில் ராஜஸ்தானின் பிகானேரில் அமைந்துள்ள பண்டசார் சமணக் கோவில் ஆகும்.

இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா? | Whtch Indian Temple Built With 40 000 Kg Of Ghee

கோவிலைக் கட்டுவதற்கான சுண்ணாம்பு கலவையைத் தயாரிக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக சுமார் 40,000 கிலோ தூய நெய் பயன்படுத்தப்பட்டதாகப் பல தலைமுறைகளாகக் கூறப்பட்டு வருகிறது. இதுவே இந்தக் கோவிலின் மிகப் பெரிய சிறப்பாகக் கருதப்படுகிறது.

ஆனால் இதைவிட வியப்பூட்டும் மற்றொரு நம்பிக்கையும் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும் நாட்களில், இந்தக் கோவிலின் பழமையான கல் தரைப்பகுதிகளில் இருந்து நெய் போன்ற பசை வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா? | Whtch Indian Temple Built With 40 000 Kg Of Ghee

 

இதற்கான உறுதியான அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை என்றாலும், இந்த நம்பிக்கை இன்று வரை பலரின் ஆச்சரியத்தைத் தூண்டி வருகிறது. வரலாறு, பொறியியல், நாட்டுப்புறக் கதைகள் என எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இந்தக் கோவில் ராஜஸ்தானின் முக்கியமான கலாச்சார மற்றும் பாரம்பரியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button