இந்தியா

மெட்ரோ ரயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட வழித்தடமான போரூர் – பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.

முதலமைச்சர் விஜய் சென்னை மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில்   (29) மாலை 4 மணி அளவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளார்.

இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு அண்ணாசாலை வந்த முதலமைச்சர் விஜய் ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையம் சென்று மெட்ரோவில் பயணம் செய்தார். நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் செய்யும் அவர் அங்கு இறங்கி மெட்ரோ ரயில் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

அதன்பிறகு அங்கிருந்து காரில் ஏறி கிண்டி கத்திப்பாரா செல்கிறார். அங்கு பூந்தமல்லி ரோட்டில் நடைபெறும் மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து காரில் போரூர் செல்கிறார். சென்னை மெட்ரோ ரெயிலின் 2 ஆம் கட்ட வழித்தடமான போரூர் – பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஆளில்லா ரயிலில் போரூர் வரை பயணிக்கிறார். போரூரில் இறங்கி கார் மூலம் வீட்டுக்கு திரும்புகிறார்.

முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button