கவிதைகள்

ஏன் தலை கவிழ்ந்தேன்?…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

அன்று மேல்மாடியில் உன்னை நான் பார்த்தேன் என்னை நீயும்பார்த்தாய்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என
பண்டைப் புலவன் கம்பன் சொன்னதே நடக்கிறது என
பரவசமாய் தினமும் பாடித்திரிந்தேன் பகல் இரவாக நானும்

 

நேற்றுன்னைப் பார்த்தபோதோ நீயோ நிலத்தைப் பார்த்தாய்
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயென
அந்நாள் திரைக்கவிஞர் நாணத்தை தெளிவாய்ச் சொன்னாரென
என்னுள் வியந்து போற்றினேன் அவரெழுதிய தெளிவைக்கண்டு

இன்று நீ எனைப் பார்க்கையில் என்பார்வையும் கவிழ்கிறதே
ஆண்மைக்கும் உண்டோ நாணம் என நீ தவறாக எண்ணாதே
உன் கண்களின் காந்தக் கதிர்வீச்சை அருகில் நின்று முழுதாய் நோக்க முடியாமல்
என் கண்களை விலக்கவே தலை கவிழ்ந்தேன் கண்ணே என்கண்மனி!

சங்கர சுப்பிரமணியன்

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button