பலதும் பத்தும்

ரோபோக்கள் உள்ளிட்ட சீன தயாரிப்புகளின் இறக்குமதிக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை

தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அபரிமிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கப்படும் முக்கியத் தொழில்களை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவர முயலும் வகையில் சீனாவின் ரோபோக்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை தடைசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் நடவடிககை எடுத்துள்ளது.

ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பேட்டரிகளை மின்கட்டமைப்புகள் மற்றும் தரவு மைய உபகரணங்களுடன் இணைக்க உதவும் பவர் இன்வெர்ட்டர்களுடன், புதிய மனித உருவ மற்றும் நாற்கால் ரோபோக்களின் சீன இறக்குமதியையும் தடை செய்கின்றன.

இந்தக் கட்டுப்பாடுகள், சீனாவின் இடையூறு, தரவுத் திருட்டு மற்றும் இணையவழித் தாக்குதல்கள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button