அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம், யூனியன் கவுண்டியில் உள்ள கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில் மின்கம்பத்தில் ஏறிய கரடி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20ஆம் திகதி, சாலையோரத்தில் அமைந்திருந்த சுமார் 22 அடி உயர மின்கம்பத்தில் கரடி ஏறி அதன் உச்சிப்பகுதி வரை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, மின்கம்பத்தின் உயர் மின்னழுத்த கம்பிகளை கரடியின் உடல் தொட்டதால் அதன்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அவதானித்த வாகன ஓட்டிகள் உடனடியாக பொலிஸாருக்கும் மீட்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் கரடியை உயிருடன் மீட்க முயற்சித்த போதிலும், கடுமையான மின்சார தாக்குதலால் கரடி மின்கம்பத்தின் உச்சியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கரடியின் உடல் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மின்கம்பத்தின் உச்சியில் சிக்கியிருந்த கரடியின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
![]()