உலகம்

எபோலாவை கட்டுப்படுத்தியது உகாண்டா – இறுதி நோயாளியும் வீடு திரும்பினார்

எபோலா தொற்று இல்லாத மாநிலமாக உகாண்டா தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

உகாண்டாவில் கடைசியாக எபோலா நோயால் பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டைச் சேர்ந்த நோயாளி, ஜூன் 22 அன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 20 பேர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

2000-ஆம் ஆண்டில் தனது முதல் பெருந்தொற்றை பதிவு செய்ததில் இருந்து, உகாண்டா பலமுறை எபோலா பரவல்களைச் சந்தித்துள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக நாடு பெற்ற நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தி, சமீபத்திய தொற்றுகளை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button