உலகம்

நைஜீரியாவில் கிராமமொன்றை சுற்றிவளைத்த ஆயுததாரிகள் – 30 பேர் படுகொலை

நைஜீரியாவின் கடூனா மாநிலத்தில் இன்று அதிகாலை ஆயுததாரிகள் கிராமமொன்றை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில், குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித் தனமாக சுட்டும், தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 08 குழந்தைகளும் அடங்குவதாக கிராமத் தலைவரின் செயலாளர் டோகன் ராணா (Dogon Rana) கூறினார்.

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வட-மத்தியப் பகுதிகளில் ஆயுதக் கும்பல்கள் மற்றும் பிற குற்றக் குழுக்களின் வன்முறை ஒரு பெரிய பாதுகாப்புச் சவாலாக மாறியுள்ளது.

கடூனா மாநிலத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button