பலதும் பத்தும்

இனி திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடத்தில் தரிசிக்கலாம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்காக ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன முறைகள் உள்ளன.

இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எளிதாக தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

அதன்படி, மூத்த குடிமக்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் செய்யலாம்.

அவர்களின் அடையாள அட்டை மற்றும் வயது சான்றை எஸ்1 கவுன்ட்டரில் காண்பித்துவிட்டு, கோயிலின் வலதுபுற சுவரையொட்டி அமைந்துள்ள மண்டபம் வழியாக தரிசனத்துக்குச் செல்லலாம்.

இந்த பாதையில் படிக்கட்டுகள் இல்லாததால், மூத்த குடிமக்கள் எளிதாக நடந்து செல்ல முடியும்.

இதன் மூலம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.

தரிசனத்துக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் உள்ளிட்டவை வழங்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button