பலதும் பத்தும்

திரையரங்கில் சத்தமாகச் சிரித்த பெண் மீது பீட்சா தட்டால் தாக்குதல்!

அமெரிக்காவில் திரையரங்கில் படம் பார்க்கும்போது சத்தமாகச் சிரித்த பெண் மீது, சக பார்வையாளர் பீட்சா தட்டால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள திரையரங்கு ஒன்றில், பெண் ஒருவர் தனது தோழிகளுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது படத்தின் சில சுவாரசியமான காட்சிகளைக் கண்டு அவர்கள் தங்களை மறந்து சத்தமாகச் சிரித்துள்ளனர்.

இதனால் அருகில் அமர்ந்திருந்த இளைஞருக்குக் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்த இளைஞர், திடீரென இருக்கையை விட்டு எழுந்து அப்பெண்ணைக் கடுமையாக எச்சரித்ததுடன், தான் கையில் வைத்திருந்த கனமான பீட்சா தட்டைக் கொண்டு அப்பெண்ணின் கன்னத்தில் பலமாகத் தாக்கினார்.

இதனால் நிலைகுலைந்து போன அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.

தாக்குதலை நடத்திவிட்டு எந்தவிதப் பதற்றமும் இன்றி தனது இருக்கைக்குத் திரும்பிய அந்த இளைஞர், வழக்கம் போல் அமைதியாகப் படம் பார்க்கத் தொடங்கினார். இந்தச் சம்பவம் முழுவதையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழிகள் தங்கள் செல்பேசியில் காணொளியாகப் பதிவு செய்தனர்.

தற்போது இந்தக் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் பொது இடத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button