உலகம்

ஈரான் போரில் சட்டப்பூர்வ இலக்காக மாறும் பிரித்தானியா

ஈரானுடனான எந்தவொரு போரிலும் அமெரிக்காவிற்கு பிரித்தானியாஆதரவளித்தால், அது ஒரு “உறுதியான மற்றும் சட்டபூர்வமான இலக்காக” மாறும் என்று அந்நாட்டின் அரசு ஊடகமான IRIB செய்தி வெளியிட்டுள்ளது,

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோதலில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் பிரித்தானியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட எந்தவொரு நாடும் சட்டபூர்வமான இலக்காகக் கருதப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பிரித்தானியாவின் விமானத் தளங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button