சரிந்தது ராஜபக்ச இராச்சியம்! கண்ணாடி முன்னால் நின்று மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி..

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து ”தெங் செபத”(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தயாராக இருங்கள்..
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் நாட்டை சீரழித்தனர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
பல அக்கிரமங்களை செய்தமை, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களானமை உள்ளிட்ட செயல்களை மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
எனவே, உங்களுடைய அக்கிரமங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கான காலம் உருவாகியிருக்கின்றது. இன்னும் சிறிது காலத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும். எனினும், மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தில் மேலிருந்து கீழ் வரை, குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால்தான் மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்தி, புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களின் பக்கமே எமது ஆதரவு இருக்கும். எனவே, உங்களுடைய பொருட்களெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.
எப்போதும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
![]()