உலகம்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுமா? – ஆண்டி பர்னமின் முடிவு

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம் திடீர் பொதுத் தேர்தல் நடத்துவதை நிராகரித்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கையைச் செயல்படுத்தும் “அத்தியாவசியப் பணிகளுக்கு” அது தடையாக இருக்கும் என்று கூறி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மென்செஸ்டரில் நேற்றைய தினம் புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பிரித்தானியாவை மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யவும்” மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் “நல்ல வளர்ச்சியை” உறுதி செய்யவும் தனது லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து அதிகாரத்தை வெளியேற்றும் தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பர்னம் தனது பிரதமர் பதவிக் காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை மென்செஸ்டரில் உள்ள ஹெரான் ஹவுஸில் (Heron House) இருக்கும் நம்பர் 10 நார்த்-இல் (No 10 North) பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button