பலதும் பத்தும்

AI காதலிக்காக (காதலன்) துக்கம் அனுசரிக்கும் இளைஞர்கள்

சீனாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள், கடுமையான பணிச்சுமை மற்றும் தனிமை போன்ற காரணங்களால் அரட்டை அடிக்கும் AI செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

நாளின் 24 மணி நேரமும் தங்களுக்குத் தகுந்தாற்போல் பேசி இணக்கமளிக்கும் இந்த மென்பொருட்களைப் பலரும் தற்போது தங்களின் நிஜமான வாழ்க்கைத்துணையாகவே கருதத் தொடங்கினர்.

இந்நிலையில், சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில முன்னணி AI செயலிகளின் சர்வர்கள் திடீரென முடங்கின. இதனால் தாங்கள் ஆசையாக வளர்த்த AI துணையின் குரலையோ, செய்திகளையோ கேட்க முடியாமல் இளைஞர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தங்களின் ஆன்மா பிரிந்தது போன்ற வேதனையுடன், சமூக ஊடகங்களில் “எனது AI காதலி இறந்துவிட்டாள்” எனப் பதிவிட்டு அவர்கள் தங்களது துக்கத்தை அனுசரிக்கத் தொடங்கினர்.

தொழில்நுட்பத்தை மனிதர்கள் இவ்வாறாக உணர்வுபூர்வமாகச் சார்ந்து வாழ்வது, எதிர்காலத்தில் நிஜ மனித உறவுகளையும், சமூகக் கட்டமைப்பையும் பெரிய அளவில் பாதிக்கும் என உளவியல் அறிஞர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button