பலதும் பத்தும்

ஜப்பானில் முதல் முறையாக மகப்பேறு விடுப்பு எடுத்த மேயர்

ஜப்பானில் முதல் முறையாக மேயர் ஒருவர் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார்.

மேற்கு ஜப்பானில் சுமார் 69,000 மக்கள் வசிக்கும் யவாட்டா நகரின் மேயரான ஷோகோ கவாட்டா (Shoko Kawata), இன்றைய தினம் மகப்பேறு விடுப்பை எடுத்துள்ளார்.

இது உள்ளுர் சமூகத்தினர் மத்தியில் சில விமர்சனங்களை கொண்டுவந்துள்ளதோடு, சர்வதேச ஊடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஷோகோ கவாட்டா (Shoko Kawata), யவாட்டா நகர ஊழியர்களுக்கு 16 வார மகப்பேறு விடுப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், மேயர் பதவிக்கு அத்தகைய நெறிமுறை எதுவும் இல்லை என்று கூறினார். இதனால், அவரே ஒரு புதிய நெறிமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்தபோது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சனே டகாயிச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமரான போதிலும், அந்நாட்டில் மிகப்பெரிய பாலின இடைவெளி, குறிப்பாக அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button