உலகக்கிண்ணக் கால்பந்து – கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து

உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் 8 அடி உயர பிரம்மாண்ட மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
உலகின் முக்கிய நிகழ்வுகளைத் தனது கலைவண்ணத்தால் செதுக்கும் அவர், இம்முறை உலகக் கிண்ண வடிவத்தை மணலில் உருவாக்கியுள்ளார்.
இந்தச் சிற்பத்தில் இறுதிப்போட்டியில் மோதும் ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரு நாடுகளின் தேசியக் கொடிகளுடன், “உலகக்கிண்ண 2026 இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள்”என்ற செய்தியையும் இடம்பெறச் செய்து, இரு அணிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணக் கால்பந்து 23ஆவது தொடரின் சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது.
கால்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினாவும், முன்னாள் சாம்பியனான ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
![]()