உலகம்

சீனாவின் சிவப்பு பயங்கரவாதத்தை எதிர்க்க தைவானியர்களுக்கு அழைப்பு

தைவான் தனது ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், சீனாவின் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடாது என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-டே (Lai Ching-te) வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பெய்ஜிங்கிலிருந்து வரும் “சிவப்பு பயங்கரவாதத்தை” எதிர்க்குமாறு தனது ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (டிபிபி) உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

டிபிபி-யின் வருடாந்திர மாநாடு இன்று இடம்பெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமைதிக் காலங்களிலும் தைவான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

குறிப்பாக சீனாவின் புதிய இன ஒற்றுமைச் சட்டம், பெய்ஜிங்கிற்கு அதன் எல்லைகளுக்கு வெளியே உள்ள மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதை லாய் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் இந்த கூற்றானது தைவானிய மக்களை கைது செய்ய வழிவகை செய்வதாகவும் லாய் எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் தைவானின் இந்த கருத்தை சீனா மறுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button