உலகம்

அடுத்த மூன்று நாட்களுக்கு ஆபத்து; ஈரான் மீது கடும் தாக்குதல்?; ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க இராணுவம் அடுத்த மூன்று நாட்களுக்கு ஈரானுக்கு எதிராக கடுமையான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வரத் தவறினால், அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என எச்சரித்தார்.

மேலும், “அடுத்த மூன்று நாட்களுக்கு அமெரிக்க இராணுவம் ஈரானை கடுமையாகத் தாக்கும். அதன் பின்னர் அவர்களின் நிலைமை மேலும் மோசமடையும். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்காகக் கொள்ளப்படும். ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், அந்த முக்கிய கட்டமைப்புகள் அனைத்தும் அழிக்கப்படும்” என ட்ரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button