சாமர சம்பத்துக்கு எதிராக கர்தினால் சட்ட நடவடிக்கை

பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் தொடர்பாக போலியான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கருத்து, மதக் குழுக்களுக்கு இடையே அமைதியின்மையை ஏற்படுத்த வழிவகுக்கலாம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய இராணுவத் தளபதி கடந்த 2ஆம் திகதி பழத்தட்டு ஒன்றுடன் கர்தினாலை சந்தித்து, தனது சேவைக்காலத்தை நீடிப்பதற்கு ஆதரவு கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குற்றம் சுமத்தி கருத்து வெளியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஆயர் சிறில் காமினி, அந்தத் தினத்தில் கர்தினால் நாட்டில் இருக்கவில்லை எனவும், அவர் அக்காலப்பகுதியில் வத்திக்கானில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
![]()