பலதும் பத்தும்

கனடாவில் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு 40 மில்லியன் டொலர்கள் !

கனடாவில் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதியருக்கு, தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள அதிர்ஷ்ட செய்தி தொலைபேசி அழைப்பின் மூலம் கிடைத்துள்ளது.

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் Montérégie பகுதியில் வசிக்கும் தம்பதியினர் இருவர், மீன் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். சமீபத்தில் வழக்கம்போல மீன்பிடி சுற்றுலாவை முடித்து வீடு திரும்பிய அவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், அவர்கள் வாங்கிய அதிர்ஷ்டலாப சீட்டுக்கு 40 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பரிசுத் தொகை இலங்கை நாணய மதிப்பில் சுமார் 943.9 கோடி ரூபாய் (ரூ. 9,43,91,48,604) என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட தூரப் படகு பயணங்கள் மூலம் மீன் பிடிப்பதை விரும்பும் இந்தத் தம்பதியர், பரிசுத் தொகையின் மூலம் புதிய வீடு மற்றும் புதிய படகு வாங்குவதோடு, மேலும் பல மீன்பிடி சுற்றுலாக்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button