உலகம்

காசாவில் 10 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீனத்தின் காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வயதுச் சிறுவன் உட்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறுவன் கொலை தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டார்.

கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஜபாலியா பகுதி காவல் முகாமின் தலைவரான கர்னல் முகமது மர்வான் சலீம் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், ஒரு பெண் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொல்லப்பட்ட முகமது மர்வான் சலீம், ஹமாஸ் அமைப்பின் ஜபாலியா மத்தியப் படைப்பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்ததாகவும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதால் அச்சுறுத்தலை தவிர்க்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button