முச்சந்தி

நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

குறித்த இரண்டு சிறை அதிகாரிகளில் நேற்று (13) ஒருவரும் இன்று காலை (14) ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற சிறைக்கலவரங்களில் மேலும் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலில் காயமடைந்த மற்ற சிறைக் கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button