இலங்கை

இலங்கை முன்னேற வேண்டுமெனில் இன ஐக்கியம் அவசியம் – பீரிஸ் கருத்து

இலங்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமெனில் அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள், சர்வமத தலைவர்களை சந்தித்துவருகின்றனர்.

இதன்ஓர் அங்கமாக நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல – குறிப்பாக பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது கட்டாயமாகும்.

இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் எவ்வித பாகுபாடும் தற்போது இல்லை. பிரச்சினைகள் ஏற்பட்டால்கூட நட்புரீதியான கலந்துரையாடல்மூலம் அதனை தீர்க்கலாம்.

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கலந்துரையாடலொன்று அவசியம். இதற்குனான ஆரம்பத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்.”- என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button