பலதும் பத்தும்

தினமும் 2-3 கப் காபி அருந்துவதால் கல்லீரலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு காபி மிகவும் நன்மை தரும். கல்லீரல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான சிறந்த பானங்களில் காபியும் ஒன்று என டாக்டர் சௌரப் சேத்தி கூறி உள்ளார்.

தினமும் 2-3 கப் காபி அருந்துவதால் கல்லீரலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? | Benefits Liver From Drinking 2 3 Cups Coffee Daily

தொடர்ந்து காபி அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் நோய் ஏற்படும் அபாயம் 44 சதவீதம் குறைவாக இருக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. கல்லீரல் இழைநார் நோய் என்பது கல்லீரல் நோயின் இறுதிக் கட்டமாகும். இது பெரும்பாலும் ஹெபடைடிஸ், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் நீண்டகால மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

தினமும் 2-3 கப் காபி அருந்துவதால் கல்லீரலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? | Benefits Liver From Drinking 2 3 Cups Coffee Daily

காபி கல்லீரல் நொதிகளின் அளவை மேம்படுத்த உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் ALT மற்றும் AST போன்ற கல்லீரல் நொதிகளின் அளவை காபி மேம்படுத்தும்.

தினமும் 2-3 கப் காபி அருந்துவதால் கல்லீரலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? | Benefits Liver From Drinking 2 3 Cups Coffee Daily

கொழுப்பு கல்லீரல் நோயை எதிர்த்துப் போராட காபி உதவுகிறது. ஏறக்குறைய மூன்றில் ஒரு இளைஞர்களைப் பாதிக்கும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயைத் தடுப்பதில் காபி பயனுள்ளதாக இருக்கிறது. காபி அருந்துவது கொழுப்பு கல்லீரல் ஏற்படும் அபாயத்தை குறைக்குமாம்.

தினமும் 2-3 கப் காபி அருந்துவதால் கல்லீரலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? | Benefits Liver From Drinking 2 3 Cups Coffee Daily

உங்களுக்கு காபி மிகவும் பிடிக்கும் என்றால், ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மட்டும் போதாது. நீங்கள் ஒரு நாளைக்கு 2-3 கோப்பைகள் எளிதாகக் குடிக்கலாம். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பகுப்பாய்வில், தினமும் 2-3 கோப்பைகள் காபி அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் 2-3 கப் காபி அருந்துவதால் கல்லீரலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? | Benefits Liver From Drinking 2 3 Cups Coffee Daily

கல்லீரலுக்கான முழுப்பலனை நீங்கள் பெற வேண்டும் என்றால் சர்க்கரை சேர்க்காத காபியைக் குடிக்க வேண்டும்.  ஃபில்டர் காபியையும் நீங்கள் குடிக்கலாம். முழுப் பலன்களையும் பெற, காபியைச் சர்க்கரை இல்லாமல் குடிப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button