ஐரோப்பாவின் மிக விலையுயர்ந்த நாடு இனி சுவிட்சர்லாந்து அல்ல

சூரிச்: ஐரோப்பாவின் மிக அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நாடாக நீண்டகாலமாகக் கருதப்பட்ட சுவிட்சர்லாந்தை, தற்போது ஐஸ்லாந்து முந்தியுள்ளது.
Eurostat வெளியிட்ட புதிய விலைக் குறியீட்டு ஆய்வின்படி, ஐஸ்லாந்து ஐரோப்பாவின் மிக விலையுயர்ந்த நாடாக முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இருப்பினும், அதிக விலைவாசி இருந்தாலும், உயர்ந்த சம்பளங்கள் காரணமாக சுவிட்சர்லாந்தின் வாங்கும் திறன் (Purchasing Power) ஐரோப்பாவிலேயே மிகவும் வலுவாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIQ-GfK நிறுவனத்தின் ஆய்வின்படி, ஒருவருக்கான சராசரி வாங்கும் திறன் சுவிட்சர்லாந்தில் 49,724 சுவிஸ் பிராங்க் ஆக பதிவாகியுள்ளது. இது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மக்களின் நிகர வருமானமும் 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேவேளை, நாட்டுக்குள் வாங்கும் திறனில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. சூக் (Zug), ஷ்வீஸ் (Schwyz) மற்றும் நிட்வால்டன் (Nidwalden) ஆகிய கண்டோன்களில் வாங்கும் திறன் அதிகமாக இருப்பதுடன், டிசினோ (Ticino), வலே (Valais) மற்றும் ஜூரா (Jura) ஆகிய கண்டோன்களில் அது குறைவாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
![]()