பலதும் பத்தும்

சிக்காக்கோவில் விமானத்தில் மோதிய வான வேடிக்கை வெடிபொருள்

அமெரிக்கா சிக்காக்கோவில் தரையிறங்கிக் கொண்டிருந்த வானூர்தி மீது வான வேடிக்கை வெடிபொருள் தாக்கியுள்ளது. எனினும் இதன்போது வானூர்திக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டாவிலிருந்து சிகாகோ மிட்வே சர்வதேச வானூர்தி நிலையத்தை நோக்கி பயணித்த இந்த வானூர்தி இரவு 8.30 அளவில் தரையிறங்க முற்பட்டபோது இந்த வானவேடிக்கை வெடிபொருளால் தாக்கப்பட்டது என வானூர்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது வானூர்தி எவ்வித சேதமுமின்றி பாதுகாப்பாகத் தரையிறங்கியதுடன், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button