பலதும் பத்தும்

வினாடிக்கு 3.6 மீற்றர் பயணம் : உலகின் அதிவேக சிலந்தி அடையாளம்

ஆஸ்திரேலியாவின் காடுகளில் வாழும் சிலந்தியொன்று உலகின் அதிவேகமான சிலந்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிலந்தியானது வினாடிக்கு கிட்டத்தட்ட 3.6 மீட்டர் வேகத்தை எட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் க்ரீஃப்ஸ்வால்ட் (Greifswald) பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி (Imperial ) ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக 160 இற்கும் மேற்பட்ட உயிருள்ள சிலந்தி இனங்கள் சோதிக்கப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு சிலந்தியின் இயங்கும் வேகத்திற்கும் அதன் உடல் நிறைக்கும் இடையே ஒரு பொதுவான தொடர்பை ஆய்வு கண்டறிந்துள்ளது. பெரிய சிலந்திகள் அவற்றின் வயிறு அதிக கனமாக இல்லாவிட்டால் வேகமாக இயங்குகின்றன.

இருப்பினும், ஒரே மாதிரியான உடல் நிறை கொண்ட சிலந்திகளில் குறிப்பிடத்தக்க வேக மாறுபாடுகளை காட்டுவதாகவும், குறிப்பாக சிறிய சிலந்திகள் அதிக வேகத்தில் பயணிப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button