த.வெ.கவுக்கு எதிராக தி.மு.க. முறையீடு

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
த.வெ.க. அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி தெரிவிக்கையில்,
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம்.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களைவிட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அரசின் எல்லாக் கூட்டங்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறார்கள். இப்படி ஒரு கேவலமான சூழ்நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தோம். அவர் அதை கூர்மையாக கவனித்தார் என்று அவர் தெரிவித்துள்ளர்.
![]()