பலதும் பத்தும்

வட்ஸ்அப்பில் வரவுள்ள அதிரடி மாற்றம்: இனி தொலைபேசி எண் தேவையில்லை

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.

அடுத்த சில மாதங்களில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், உலகெங்கிலும் உள்ள 3 பில்லியன் பயனர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கட்டாயமில்லை எனவும் விரும்புபவர்கள் மட்டுமே தங்களுக்கு விருப்பமான பயனர்பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பயனர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயரை எப்போது வேண்டுமானாலும் நீக்கவோ அல்லது மாற்றவோ வாய்ப்பு வழங்கப்படும்.

ஒரு பயனர்பெயருக்கு அதிகபட்சமாக 35 எழுத்துக்கள்/குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

அதேநேரம் பிரபல அரசியல்வாதிகள் அல்லது பிரபலமானவர்களின் பெயர்களைப் போலிப் பெயர்களாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வட்ஸ்அப் கணக்கைத் தொடங்க தொலைபேசி எண் இன்னும் தேவைப்பட்டாலும், பயனர்பெயர் அம்சம் செயல்படுத்தப்பட்டவுடன், மற்றவர்களால் உங்கள் தொலைபேசி எண்ணைப் பார்க்க முடியாது.

“இது அதிக தனியுரிமைப் பாதுகாப்பை வழங்கும், குறிப்பாக குழு அரட்டைகளில் (Group Chats) தங்களது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர விரும்பாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்கிறார் வட்ஸ்அப்பின் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் ஆலிஸ் நியூட்டன்-ரெக்ஸ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button