கொட்டகலை புனித அந்தோனியார் திருச்சுரூபத்தின் 10 ஆம் ஆண்டு விழா மற்றும் வருடாந்த திருவிழா

கொட்டகலை, லொக்கில் தோட்டத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருச்சுரூபத்தின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி மற்றும் வருடாந்த திருவிழா ஜூலை 3 முதல் 5 ஆம் திகதி வரை பக்தி பூர்வமாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் விசேட ஆன்மிக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் தலைமையில் கொடியேற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நற்செய்தி கூட்டமும் நடைபெறவுள்ளது.
மறுநாள் ஜூலை 4 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நற்கருணை மாலை ஆராதனையும், சுகமளிக்கும் சிறப்பு வழிபாடும் இடம்பெறவுள்ளது.
இத் திருவிழாவின் இறுதி நாளான ஜூலை 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு திருவிழா பாடல் திருப்பலி சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
இத்திருவிழாவில் கலந்து கொண்டு புனித அந்தோனியாரின் பரிந்துரையில் இறையாசீரைப் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு பங்குத் தந்தை மற்றும் திருச்சுரூப நிர்வாகக் குழுவினர் விடுத்துள்ளனர்.
![]()