பலதும் பத்தும்

யூரியூப்பில் வெளியான புதிய அப்டேட்

ஸ்மார்ட் போன் பயனர்களிடையே மிகவும் பிரபலமான செயலியாக விளங்கும் யூரியூப், தொடர்ந்து புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், தற்போது பயனர்களின் அனுபவத்தை மாற்றும் புதிய வசதி ஒன்றை சோதனை அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

இனி, பயனர்களுக்கு தங்களுக்கு விருப்பமான உள்ளடக்கங்களை நேரடியாக தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

“தனிப்பயன் முகப்புப் பக்கம்” என அழைக்கப்படும் இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், கிரிக்கெட் பகுப்பாய்வு, தனிநபர் நிதி, சமையல், உடற்பயிற்சி, பயணக் காணொளிகள் போன்ற தங்களுக்கு விருப்பமான தலைப்புகளை பதிவு செய்யலாம். அ

மேலும், பயனர்கள் தங்களின் மாறும் ஆர்வங்களுக்கு ஏற்ப தலைப்புகளை மாற்றிக்கொள்ளவும் முடியும். பழைய பார்வை வரலாற்றை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், தற்போதைய விருப்பங்களையும் கருத்தில் கொண்டு முகப்புப் பக்கம் புதுப்பிக்கப்படும்.

அதேவேளை, ஒரே நேரத்தில் ஒரு தனிப்பயன் முகப்புப் பக்கத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், 30 நாட்கள் பயன்படுத்தப்படாவிட்டால் அது தானாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button