பலதும் பத்தும்

AI இன் வளர்ச்சி – Apple தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

மெமரி சிப்களின் விலை “தாங்க முடியாத அளவுக்கு” உயர்ந்துள்ளதால், Apple நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிம் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியே இந்த மெமரி சிப் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் 18 மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெமரி சிப்களின் விலை, குறிப்பாக ரெம் (RAM) விலை, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது ஏற்கனவே 2026-ல் மற்ற தொலைபேசிகளின் விலையில் 20 சதவீத உயர்வுக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button