பலதும் பத்தும்

தங்கம் விலைக்கு டஃப் கொடுக்கும் மாம்பழம்: ஒரு பழத்தின் விலை தெரியுமா? வியக்க வைக்கும் அரிய ரகம்!

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டம், கத்திவாடா பகுதியில் விளையும் “நூர்ஜஹான்” என்ற அரிய வகை மாம்பழம் அதன் பிரம்மாண்டமான அளவும், அதிக விலையும் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்ன சிறப்பு?

விவசாயி பரத்ராஜ் சிங் ஜாதவ் என்பவரின் தோட்டத்தில் விளையும் இந்த மாம்பழம் ஒன்றின் விலை சுமார் ரூ.3,800. ஒரு பழம் சுமார் 3 கிலோ 300 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

சில மாம்பழங்கள் 3 முதல் 5 கிலோ வரை கூட வளரும் என்பதால், இதை “மாம்பழங்களின் ராணி” என்றும் அழைக்கின்றனர்.

இதன் விதை மட்டுமே 150 முதல் 200 கிராம் வரை எடை கொண்டிருக்கும். முழுக்க முழுக்க இயற்கை முறையில் வளர்க்கப்படும் இந்த மரங்கள் ஜனவரியில் பூத்து, ஜூன் மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன.

அரிய வகையாக இருப்பதாலும், சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதாலும், இந்த மாம்பழம் உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button