முச்சந்தி

கிளிநொச்சியில் வீதி விபத்து என்று கூறி கொலைகள்; பொலிஸாருக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம்; அரச அதிபரின் உறுதி மொழியால் கைவிடப்பட்டது

வீதி விபத்துக்களுக்கு காரணமான கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் வீதிப் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனக் கோரி பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் .

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்த வேகத்தில் வாகனச் செலுத்துகைகள் மற்றும் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை செல்லுதல் என்பவற்றின் காரணமாக அதிகளவான வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கடந்த சில நாட்களில் ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

திங்கள் இரவு கிளிநொச்சி ஏ-9 வீதியில் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட ஓய்வு நிலை அதிபர் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கிளிநொச்சியில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களை தடுக்குமாறு கோரி விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற அதிபரின் பதாகைகளை ஏந்தியவாறு மாவட்ட செயலகம் முன்பாக புதன்கிழமை பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

கிளிநொச்சியில் பொலிஸாரின் அசமந்த போக்கே விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன என்றும் குறிப்பாக சிறிய குறைந்த வேகத்தில் செல்லுகின்ற மோட்டார் சைக்கிள் ஏனைய வாகனங்களையும் சோதனை செய்யும் பொலிசார் வேகமாக செல்லும் பெரிய வகை மோட்டார் சைக்கிள்களை சோதனையிடுவதில்லை இதனால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாகவும்

இவ்வாறான விபத்துகளில் பாதசாரி கடவையில் கொலையா இந்த குறிப்பிட்ட நாட்களில் ஐந்து கொலைகள் இவ்வாறு விபத்து என்ற போர்வையில் இடம் பெற்றிருக்கின்றன.

மாவட்ட நிர்வாகம் என்ற அடிப்படையிலே மாவட்ட நிர்வாகமும் பொலிஸ் நிர்வாகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த மாவட்டத்தில் உள்ள அனைவரும் உங்களை நம்பி வாழுகின்றோம்

இலஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகின்றமையாலேயே இந்த விபத்துக்கள் இடம் பெறுகின்றன இந்த அரசாங்கமானது ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என்று நாங்கள் நம்புகின்றோம் இந்த விபத்தினால் மாவட்டத்தினுடைய மிகப்பெரிய சொத்தை நாங்கள் இழந்திருக்கின்றோம்

இவ்வாறு விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்ற அல்லது போக்குவரத்து சட்டங்களை இறுக்கமான நடைமுறைப்படுத்தாத இலஞ்சம் ஊழலுக்கு உட்பட்டு சட்டத்தை பேணாத பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசாங்கம் ஒருபோதும் பின்னிருக்க கூடாது

ஆகவே இந்த போதைப் பொருளுக்கும் பொலிஸாரின் இலஞ்சத்தினாலும் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன

எனவே இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

இதனை அடுத்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ் .முரளீதரன் முக்கியமான இடங்களிலே கண்காணிப்பு கமராக்களை பொருத்துவது தொடர்பாக பிரதேச சபையுடன் கலந்துரையாடி இருக்கின்றோம். எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் அமைப்புகள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிஆகியோரை அழைத்து உடனடியாக கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button